வங்கிக்கணக்கில் இருந்து ரூ25 ஆயிரம் திருட்டு
தனியார் நிறுவன ஊழியரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ25 ஆயிரம் திருட்டு
வேலூர்
குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 35), தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில், வங்கிக்கணக்கு தொடர்பான கே.ஒய்.சி. எண்ணை இணைப்பில் (லிங்க்) சென்று புதுப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை உண்மை என்று நம்பிய அவர் அந்த இணைப்பில் வங்கிக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்தார்.
சிறிதுநேரத்தில் தனசேகரனின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மற்றொரு குறுந்தகவல் வந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த வங்கியை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டார்.
அப்போது வங்கி அதிகாரிகள் அதுபோன்ற குறுந்தகவலை அனுப்பவில்லை என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தனசேகரன் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story