கோத்தகிரி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் உற்சவ விழா


கோத்தகிரி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் உற்சவ விழா
x
தினத்தந்தி 12 March 2022 6:38 PM IST (Updated: 12 March 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் உற்சவ விழா நடைபெற்றது.

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டு 9-ம் ஆண்டு துவங்குவதையொட்டி உற்சவ விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

 இதையொட்டி, நேற்று காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. 10.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக பூஜையும், மதியம் 12.30 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு உற்சவ மூர்த்தி மற்றும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உற்சவ மூர்த்தியையும், சவுடேஸ்வரி அம்மனையும் வழிபட்டுச்சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவாங்கர் சமூக நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.

Next Story