வாகனம் மோதி அரசு ஊழியர் சாவு
கயத்தாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு ஊழியர் இறந்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருடைய மகன் சக்கரபாணி (வயது 45). இவர் வானரமுட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1-ந் தேதி வானரமுட்டியில் இருந்து திருமங்களக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சக்கரபாணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் சக்கரபாணி பரிதாபமாக இறந்தார். சக்கரபாணிக்கு கனகலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story