கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 March 2022 6:56 PM IST (Updated: 12 March 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கிணத்துக்கடவு

கோவை -பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

நான்கு வழிச்சாலை 

கோவை -பொள்ளாச்சி இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை வழியாக கோவையிலிருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக உடுமலை, பழனி, மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மலுமிச்சம்பட்டியிலிருந்து பொள்ளாச்சி வரை உள்ள நான்கு வழிச்சாலையில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளதால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் சாலைகளை கடந்து வர வசதியாக 21/2 கிலோ மீட்டருக்கு ஒரு இடைவெளி வீதம் விடப்பட்டுள்ளது. 

விபத்தில் பலர் உயிரிழப்பு

இந்த இடைவெளி அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சரிவர சிக்னல்கள் ஒளிராததால் இந்த இடைவெளி விடப்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று பலர் உயிரிழந்து வருகின்றனர். 
நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுப்பது குறித்து கிணத்துக்கடவு போலீசார் கிணத்துக்கடவு ஏலூர் பிரிவு முதல் கோவில்பாளையம் சேரன் நகர் வரை உள்ள நான்கு வழிச்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை தேசிய நெடுஞ்சாலை துறையினர் பழுதடைந்த சிக்னல்கள் மற்றும் சாலையில் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் விளக்குகள் அமைக்க நடடிக்கை எடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. 


அறிக்கை சமர்ப்பிப்பு

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோவை-பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு பகுதியில் நான்கு வழிச்சாலையில் உள்ள தானியங்கி சிக்னல்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சரிவர செயல்படுவதில்லை. அதேபோல் விபத்து ஏற்படுவதை தடுக்க ஒளிரும் சிக்னல்களை அமைக்க வேண்டும். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் ஏற்கனவே கூடுதல் விளக்குகள், சிக்னல் அமைக்க வேண்டும் என அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. மேலும், நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தடுக்க தடுப்புகள் வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர். மேலும், நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

Next Story