ஆட்சி மொழி பயிலரங்கம்


ஆட்சி மொழி பயிலரங்கம்
x
தினத்தந்தி 12 March 2022 7:01 PM IST (Updated: 12 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் வளாச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடந்தது.

திருவண்ணாமலை

அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி திட்டச்செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் என 2 நாட்கள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி வரவேற்றார். தொடர்ந்து தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது மற்றும் கபிலர் விருது பெற்ற புலவர் வெற்றியழகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் எழுத்தாளர் சண்முகம் மற்றும் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் தலைவர் குப்பன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். தண்டராம்பட்டு பாரத் வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராமு சிறப்புரையாற்றினார். 

முன்னாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் சிவசாமி, வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர்.

திருவண்ணாமலை தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் இந்திரராசன் கருத்துரையாற்றினார். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story