சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 12 March 2022 7:09 PM IST (Updated: 12 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைக்காக கூடுதல் கட்டிடம் கட்ட சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

சேத்துப்பட்டு

மருத்துவமனைக்காக கூடுதல் கட்டிடம் கட்ட சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு-போளூர் சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் கட்டிடங்கள் தேவைப்பட்டன.

அதற்காக கூடுதல் கட்டிடங்கள் கட்ட தமிழக அரசிடம் போதிய இடம் கேட்கப்பட்டு இருந்தது. சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் உள்ள சர்க்கரை பிள்ளையார் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடம் இருந்தது தெரிய வந்தது. அந்த இடத்தை, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்காக கூடுதல் கட்டிடம் கட்ட அதிகாரிகள் தேர்வு செய்தனர். 

அங்கு 3 ஏக்கர் நிலத்தில் 40 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருந்ததையும், மீதி நிலத்தில் ஒரு வீடு கட்டப்பட்டு இருந்ததையும் செய்யாறு உதவி கலெக்டர் விஜயராஜ் தலைமையில் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர். 

அப்போது மண்டல தாசில்தார் கோமதி, நெடுங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வேலாயுதம், கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

Next Story