ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன சங்கங்களின் தலைவர் பதவிக்கு 27 ந்தேதி தேர்தல்


ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன சங்கங்களின் தலைவர் பதவிக்கு 27 ந்தேதி தேர்தல்
x
தினத்தந்தி 12 March 2022 7:13 PM IST (Updated: 12 March 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி

ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.

பாசன சங்க தேர்தல்

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 21 பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு பாசன சங்க தலைவர் தேர்தல் நடத்தாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேர்தல் நடத்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி 21 பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி சங்க தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படுகிறது. 21-ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை வேட்புமனுக்கள் கலந்தாய்வு செய்தல், செல்திறன் உள்ள வேட்புமனுக்களின் பட்டியலை வெளியிடப்படுகிறது. பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பிறகு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

27-ந்தேதி வாக்குப்பதிவு

வருகிற 27-ந்தேதி காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 16-ந்தேதி வேட்புமனுவை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டரிடம் கொடுக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் அந்தந்த நீரினை பயன்படுத்துவோர் சங்க வாக்காளர் பட்டியலில் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் ஆட்சி மண்டல ஆளுகைக்கு உட்பட்ட வாக்காளர் ஒருவர் முன்மொழிதல் வேண்டும். ஆதார் அடையாள அட்டை அல்லது இதர அடையாள அட்டை நகல் மற்றும் அரசு நிர்ணயம் செய்து உள்ள தொகை ஆகியவற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மேற்கண்ட தேர்தல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story