போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்;
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த மனுவில் அவர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தை சேர்ந்த பாலா (வயது42) (லாரி டிரைவர்) என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது பாலா தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறினார்.
கைது
இதன்போில் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து லாாி டிரைவர் பாலாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story