சரக்கு ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
சரக்கு ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பழனிசாமி. இவர் கடந்த 9-ந் தேதி கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டார். அப்போது மலைவாழ் மக்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ டிரைவரிடம், பழனிசாமி ரூ.100 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரல் ஆனது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமியை நாமக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story