உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்


உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 13 March 2022 12:30 AM IST (Updated: 12 March 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம்:-

தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகேசன், மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின் படி நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வட்டார புள்ளியியல் ஆய்வாளர்களுக்கு, வட்டார அளவில் இருப்பது போல் அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு களப்பணி மற்றும் அலுவலக பணிகளில் உதவிட குறைந்தபட்சம் தற்காலிக அடிப்படையிலாவது உதவியாளர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் ெதாடர்பாக வருகிற சட்டசபை கூட்ட தொடரில் தகுந்த அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story