பழனி அருகே கார்-பஸ் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலி
பழனி அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். அவருடன் வந்த பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கீரனூர்:

பிளஸ்-2 மாணவர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகன் சுதிர் (வயது 17). இவர் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதே வகுப்பில் கோவை கணபதி பகுதியை சேர்ந்த ரகுபதி மகன் ஜெயக்குமார் (17) என்பவரும் படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
இந்தநிலையில் பெரிச்சிபாளையத்தில் உள்ள சுதிரின் குலதெய்வ கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜெயக்குமார் நேற்று முன்தினம் சுதிர் வீட்டுக்கு வந்தார். இதற்கிடையே நேற்று காலை ஜெயக்குமார், சுதிர் மற்றும் அவரது உறவினர்களான 3 பெண்கள் என 5 பேர் சுதிரின் காரில் பெரிச்சிபாளையத்தில் இருந்து நால்ரோடு பகுதியில் உள்ள கடைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் பெரிச்சிபாளையம் நோக்கி அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை ஜெயக்குமார் ஓட்டினார்.
பிளஸ்-2 மாணவர் பலி
கீரனூர் அருகே கல்துறை என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது, ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜெயக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதிர் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். பஸ்சில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மீது பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story