கம்பம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு காலாவதியான சத்து மாத்திரைகள் வினியோகம்
கம்பம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு காலாவதியான சத்து மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது.
கம்பம்:
தமிழக சுகாதாரத்துறை மூலம் ரத்தசோகை தடுப்பு திட்டத்தின் கீழ் 10 வயது முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம்பருவத்தினருக்கு பள்ளிகள் மூலம் வியாழக்கிழமை தோறும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த மாத்திரைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியானது ஆகும்.
இந்தநிலையில் காலாவதி தேதியை பார்க்காமல் சில மாணவிகள் சத்து மாத்திரைகளை உட்கொண்டு விட்டனர். இதனால் அந்த மாணவிகள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர்.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், காலாவதியான மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். காலாவதியான மாத்திரை உட்கொண்ட மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். காலாவதி தேதியை சரி பார்த்த பிறகுதான் பள்ளியில் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story