குடும்ப தகராறில் பெண் படுகொலை; கணவர் தற்கொலை முயற்சி


குடும்ப தகராறில் பெண் படுகொலை; கணவர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 12 March 2022 9:41 PM IST (Updated: 12 March 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

விஜயநகர் அருகே, குடும்ப தகராறில் கோடரியால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். போலீசுக்கு பயந்து அவரது கணவர் தற்கொலைக்கு முயன்றார்.

விஜயநகர்:

விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா நாகனேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹொன்னூரப்பா. இவரது மனைவி சாந்தா(வயது 45). இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபோல நேற்று காலையும் ஹொன்னூரப்பா, சாந்தா இடையே குடும்ப தகராறு உண்டானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹொன்னூரப்பா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து சாந்தாவை வெட்டி படுகொலை செய்தார்.

 பின்னர் போலீசுக்கு பயந்த ஹொன்னூரப்பா கத்தியால் தன்னே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ஒசப்பேட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story