கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் கலைந்துரையாடல் நிகழ்ச்சி


கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் கலைந்துரையாடல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 March 2022 9:43 PM IST (Updated: 12 March 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் கலைந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் சுந்தரம் வேளாண்மை திட்டங்கள் குறித்தும், டாக்டர் பெரியசாமி கால்நடைத்துறை திட்டங்கள் குறித்தும் பேசினார்கள்.

காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சர்மிளா, வாழவச்சனூர் வேளாண்மை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஏஞ்சல், அருண் ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தேவையான விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர் பழனிசாமி, அட்மா திட்ட அலுவலர்கள் சைமன், சக்திவேல் மற்றும் வேளாண்மை மற்றும் அட்மா பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Next Story