பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்


பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 March 2022 12:00 AM IST (Updated: 12 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேட்டில் பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

வாய்மேடு:-

நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு பிண்ணையடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் வேதாரண்யம் ஒன்றிய பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். மாநில மாநாட்டில் அனைத்து பூசாரிகளும் கலந்துகொள்வது. சித்திரை மாதம் 5-ந் தேதி பிள்ளையார்பட்டியில் நடைபெற உள்ள ஆகம பூசை தொடர்பான பயிற்சிக்கு வேதாரண்யம் ஒன்றியத்தில் இருந்து 3 பேரை தேர்வு செய்து அனுப்புவது. பூசாரிகள் அனைவருக்கும் வருமானச்சான்று இல்லாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story