லாரி பஸ்களில் பொருத்தி இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல்


லாரி பஸ்களில் பொருத்தி இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 March 2022 10:22 PM IST (Updated: 12 March 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் லாரி பஸ்களில் பொருத்தி இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல்

திருப்பத்தூர்

தமிழ்நாடு போக்குவரத்து துறை துணை ஆணையர் இளங்கோவன் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் போக்குவரத்து அலுவலர் எம்.கே.காளியப்பன், மற்றும் அலுவலர்கள் திருப்பத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் உள்ளதா, அதிக பாரம் ஏற்றி செல்லப்படுகிறத,ா சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வருகிறார்களா என ஆய்வு செய்தனர். 

மேலும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தி இருந்த 15 லாரி மற்றும் பஸ்களில் இருந்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்துனர். 

15 லாரிகள் மற்றும் பஸ்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Next Story