தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 159 வழக்குகளுக்கு தீர்வு
திண்டுக்கல், பழனி உள்பட 9 இடங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 159 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல், பழனி உள்பட 9 இடங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 159 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்பட 9 கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதற்காக ஒவ்வொரு கோர்ட்டுகளிலும் நீதிபதி, வக்கீல்களை கொண்ட அமர்வு அமைக்கப்பட்டன. இந்த அமர்வு முன்னிலையில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் நேரில் வரவழைக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
இதில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி பேசினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் புவனேஸ்வரி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி ஜான்மினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா வரவேற்றார். இதில் நீதிபதிகள் மீனாசந்திரா, மோகனா, லலிதாராணி, தமிழரசி, ஆனந்தவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
3 ஆயிரத்து 159 வழக்குகள்
இதேபோல் மாவட்டம் முழுவதும் வங்கி வாராக்கடன், கல்வி கடன், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 3 ஆயிரத்து 159 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன்மூலம் ரூ.10 கோடியே 79 லட்சத்து 22 ஆயிரத்து 513 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது. அதில் 150 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் மட்டும் ரூ.7 கோடியே 34 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
--------

Related Tags :
Next Story