எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டைகள் மூலம் கடிதம் அனுப்பும் போராட்டம் பேகம்பூரில் நேற்று நடந்தது. அந்த தபால்களில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று பகல் முழுவதும் பேகம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தபால் அட்டைகள் மூலம் முதல்-அமைச்சருக்கு கடிதங்கள் எழுதி அதில் கையொப்பமிட்டனர். இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் அட்டைகளில், சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி கடிதம் எழுதப்பட்டது.
இந்த தபால் அட்டைகள் அனைத்தும் நாளை (திங்கட்கிழமை) முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story