கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தட்டச்சு தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தட்டச்சு தேர்வு வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
கடலூர்,
தமிழக தட்டச்சு பயிலகங்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தட்டச்சு தேர்வு
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி 185 மையங்களில் வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) தட்டச்சு தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. இதில் 26-ந் தேதி தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுகளின் 3 அணிகளும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்வுகளின் 1-வது அணி மற்றும் 2-வது அணிக்கும் நடக்கிறது. பின்னர் 27-ந் தேதி தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வின் 4 மற்றும் 5-வது அணியும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்வுகளின் 3 மற்றும் 4-வது அணிக்கும் நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினமே ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் உயர் வேகத்தேர்வு (ஹை ஸ்பீடு) நடக்கிறது. 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எழுதும் புகுமுக இளநிலை தேர்வும் அன்றே நடக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏ.கே.டி. நினைவு பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடக்கிறது.
உயர்வேக தேர்வு
இதில் 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புகுமுக இளநிலை தேர்வும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலை தேர்வும், 8 மற்றும் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலை தேர்வும் எழுதுகின்றனர். தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் உயர்வேகத்தேர்வு (ஹை ஸ்பீடு) எழுதுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story