செஞ்சி அருகே காதலியை தாயாக்கிய வாலிபர் கைது


செஞ்சி அருகே காதலியை தாயாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 March 2022 10:41 PM IST (Updated: 12 March 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே காதலியை தாயாக்கிய வாலிபர் கைது


செஞ்சி

செஞ்சி தாலுகா அனந்தபுரம் அருகே உள்ள அத்தியூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் ஜெயசங்கரி(வயது 27). இவரும் அதே ஊரை சேர்ந்த கண்ணுமகன் சடையன் என்கிற வினோத்(29) என்பவரும் கடந்த 2½ ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். அப்போது சடையன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜெயசங்கரியிடம் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஜெயசங்கரியின் வயிறு பெரிதாக காணப்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது ஜெயசங்கரி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சடையனின் சகோதரியிடம் முறையிட்டபோது அவர் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம் என்று கூறி சமாதானம் செய்து அனுப்பினார்.  இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி ஜெயசங்கரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சடையனிடம் சென்று ஜெயசங்கரியை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது அவர் திருமணத்துக்கு மறுத்து விட்டாா். இது குறித்து ஜெயசங்கரியின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சடையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story