தரமான சாலை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
நத்தம் அருகே தரமான சாலை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நத்தம்:
நத்தம் அருகே உள்ள பண்ணுவார்பட்டி கிராமத்தில், பிரதம மந்திரி கிராம சாலை அமைக்கும் திட்டத்தின்கீழ் புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து தரமான சாலை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நேற்று பண்ணுவார்பட்டியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story