தமிழக அரசின் பாடத்திட்டங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்


தமிழக அரசின் பாடத்திட்டங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 March 2022 10:48 PM IST (Updated: 12 March 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் பாடத்திட்டங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று இ்ந்து முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்

திருப்பூர்
தமிழக அரசின் பாடத்திட்டங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று இ்ந்து முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இணையவழியாக உரையாற்றிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி மாநில அரசின் பட்ஜெட்டில் வர வேண்டும் என்றும், மத்திய அரசு பிற்போக்குதனத்தை கல்வியில் புகுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் பெருகுவதற்கு முன்பே தமிழர்கள் இந்திய அளவில் கல்வியால் புகழ்பெற்று விளங்கினார்கள். நீதித்துறை, நாடாளுமன்றம், பல்கலைக்கழகம், மருத்துவத்துறை, விண்வெளி ஆராய்ச்சி என எல்லாவற்றிலும் முன்னணியில் இருந்ததுடன் அனைத்து இடங்களிலும் தமிழனுக்கு தனி மரியாதை இருந்தது.
 கல்விக்கொள்கை
ஆனால்‘நீட்’ தேர்வை எங்கள் மாணவர்களால் எழுத முடியாது என மாணவர்களை தமிழக முதல்-அமைச்சர் அவமானப்படுத்துகிறார். மருத்துவ நுழைவு தேர்வையோ, புதிய கல்வி கொள்கையையோ எந்த மாநில அரசும் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காத நிலையில் தமிழக அரசு மட்டும் கூறி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை அரசியல்வாதிகளால் கொண்டு வரப்பட்டது அல்ல. கல்வியாளர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் உலக தரத்துக்கு இந்திய மாணவர்கள் முன்னேற முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
பாடத்திட்டங்கள் 
தமிழக அரசின் பாடத்திட்டங்கள் தற்போதைய கல்வி நிலைக்கு போதுமானதாக இருக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர், கல்வியாளர்களை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எதை பிற்போக்குத்தனம் என சுட்டிக்காட்டுகிறார் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story