கெலமங்கலம் அருகே சொத்து தகராறில் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
கெலமங்கலம் அருகே சொத்து தகராறில் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50). இவர் மூக்கண்டப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சின்னட்டியை சேர்ந்த உறவினர் பிரேமகுமாரி (55) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிரேமகுமாரி தரப்பினர் கிருஷ்ணமூர்த்தியை மிரட்டினர். இது குறித்து கெலமங்கலம் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து பிரேமகுமாரி அவரது கணவர் நாகராஜ் (57), மகன் ஸ்ரீதர் (28) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story