பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணன்தங்கை மீது தாக்குதல்


பாப்பாரப்பட்டி அருகே  நிலத்தகராறில் அண்ணன்தங்கை மீது தாக்குதல்
x
தினத்தந்தி 12 March 2022 10:50 PM IST (Updated: 12 March 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணன் தங்கை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 56). விவசாயி. இவரது தங்கை சாந்தி. அதே ஊரை சேர்ந்தவர் முருகேசன். இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று பிரச்சினைக்குரிய இடத்தில் முருகேசன் மண்ணை கொட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோவிந்தசாமியையும், அவரது தங்கை சாந்தியையும் முருகேசன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story