சேதமடைந்து குண்டும் குழியுமான தர்மபுரி ரெயில் நிலைய சாலையை நகராட்சி தலைவர் ஆய்வு


சேதமடைந்து குண்டும் குழியுமான தர்மபுரி ரெயில் நிலைய சாலையை நகராட்சி தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 12 March 2022 10:50 PM IST (Updated: 12 March 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்து குண்டும் குழியுமான தர்மபுரி ரெயில் நிலைய சாலையை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

தர்மபுரி:
தர்மபுரி ரெயில் நிலைய சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. ரெயில்வே துறைக்கு சொந்தமான இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு மேடு பள்ளங்கள் சரி செய்யும் பணி நடந்தது. இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தது. இந்த நிலையில் தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது ரெயில் நிலைய சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ரெயில்வே துறையிடம் இந்த சாலையை சீரமைக்க தடையின்மை சான்று பெற்று அரசின் நிதி உதவியுடன் நகராட்சி சார்பில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி செயற்பொறியாளர் சரவண பாபு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நாட்டான் மாது, நகர செயலாளர் அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் சவுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story