மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் தலை நசுங்கி பலி
தாராபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதியது. இதில் வாலிபர் தலை நசுங்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாராபுரம்
தாராபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதியது. இதில் வாலிபர் தலை நசுங்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-
வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்
தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் அருகே உள்ள மாதவரத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் ஆறுச்சாமி (வயது19) தொழிலாளி. இவர் நேற்று மாலை பொன்னாபுரத்தில் உள்ள தனது சகோதரி ராதிகா வீட்டிற்கு செல்ல மாந்தியபுரத்தில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
கோவிந்தாபுரம் செட்டிபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது செட்டிபாளையம் மின் வாரியம் அருகே எதிரே தர்பூசணிலோடு ஏற்றிவந்த வேன் வருவதை கண்டு ஓரமாக ஒதுங்க முயற்சி செய்த ஆறுச்சாமி எதிரே வந்த வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
வாலிபர் பலி
இதில் வேனின் பின் சக்கரம் ஆறுச்சாமி தலை மீது ஏறியதால் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ேமலும் அருகில் இருந்தவர்கள் வேன் டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ஆறுச்சாமி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்களால் பிடிக்கப்பட்ட வேன் டிரைவர் கேரளா மாநிலம் ஆழப்புலாவை சேர்ந்த இப்ராகிம் மகன் சனோபு (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story