423 வழக்குகளில் ரூ.3 கோடிக்கு சமரச தீர்வு
உடுமலையில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 423 வழக்குகளில் ரூ.2 கோடியே 93 லட்சத்து 95 ஆயிரத்து 924-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.
உடுமலை
உடுமலையில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 423 வழக்குகளில் ரூ.2 கோடியே 93 லட்சத்து 95 ஆயிரத்து 924-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதி மன்றம்
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை சப்-கோர்ட்டு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு ஆகிய 3 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது.
உடுமலை சப்-கோர்ட்டில் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப்-கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல் எம்.பி.அப்துல் நாசரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மடத்துக்குளம், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.பாக்கியராஜ் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல ்எம்.சத்தியவாணியும், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு் கோர்ட்டில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கே.விஜயகுமார் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல் ஜே.பாக்கியலட்சுமியும் இடம் பெற்றிருந்தனர்.
423 வழக்குகளுக்கு தீர்வு
இந்த 3 கோர்ட்டுகளிலும் நடந்த மக்கள் நீதி மன்ற அமர்வுகளில் மொத்தம் 626 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி தொடர்ந்த 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 45 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 1 லட்சத்து 25 ஆயிரத்து 500-க்கு தீர்வு காணப்பட்டது. வாரிசு உரிமை கோருதல் உள்ளிட்ட 55 சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 15 வழக்குகளில் ரூ.7 லட்சத்து 86ஆயிரத்து 950-க்கு தீர்வு காணப்பட்டது. சமரசத்திற்குரிய 375 சிறு குற்ற வழக்குகளில் 336 வழக்குகளில் ரூ.5 லட்சத்து 69 ஆயிரத்து 900-க்கு தீர்வு காணப்பட்டது.
வங்கிக்கடன்
வங்கிகளில் கடன் பெற்று, கடன்தொகையை திருப்பிச்செலுத்தாமல் வாராக்கடனாக இருந்து வந்தவர்களின் கடன் தொகையை வங்கிகளில் செலுத்தி கணக்கை நேர் செய்வதற்காக சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 100பேருடைய வங்கிக்கடன் குறித்து பேசப்பட்டது. இதில் 21 பேரின் கணக்குகளுக்கு ரூ.53 லட்சத்து 64 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதுதவிர 4 ஜீவனாம்ச வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் ஒரு வழக்கில் ரூ.5 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. மற்றொரு வழக்கில் இருவரும் சேர்ந்து வாழ்வதாக சமரசம் காணப்பட்டது.
மொத்தம்
உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்ற அமர்வுகளில் மொத்தம் 626 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 423 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்து 95 ஆயிரத்து 924-க்கு தீர்வு காணப்பட்டது.
இந்த மக்கள் நீதி மன்றங்களில் அரசு வக்கீல்கள் எம்.சேதுராமன், சி.ரவிச்சந்திரன், உடுமலை வக்கீல்கள் சங்கத்தலைவர் கே.ஸ்ரீதர், செயலாளர் சி.முருகானந்தம், பொருளாளர் பி.ரம்யா, துணைத்தலைவர் டி.கருப்புச்சாமி உள்ளிட்ட வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story