கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 12 March 2022 11:13 PM IST (Updated: 12 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சி முருகன் தோட்டம் அங்கன்வாடி மையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த முகாமில் பகுதி சுகாதார செவிலியர் ஜெயந்தி, கிராம சுகாதார செவிலியர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதில் அசிக்காடு முருகன் தோட்டம், செங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த முகாமை சுகாதார ஆய்வாளர் முருகன் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story