விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்டக்டரின் 2 வயது ஆண் குழந்தை சாவு


விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்டக்டரின் 2 வயது ஆண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 12 March 2022 11:17 PM IST (Updated: 12 March 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்டக்டரின் 2 வயது ஆண் குழந்தை சாவு இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார்


விழுப்புரம்


விழுப்புரம் அருகே நங்காத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மீரா(35) என்பவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அக்‌ஷயராஜ்(2) என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 2-ந் தேதியன்று கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மீரா தனது குழந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோர் வீடான தென்னமாதேவி கிராமத்திற்கு சென்றுவிட்டார். குழந்தைக்கு பிறந்தது முதல் வலிப்புநோய் இருந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று காலை குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு நோய் வந்ததாக கூறப்படுகிறது. உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதற்கிடையே தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக  விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிவகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Related Tags :
Next Story