1,759 வழக்குகளுக்கு தீர்வு
சீர்காழியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 1,759 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.41 லட்சத்து 55 ஆயிரத்து 50 வசூலித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 1,759 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.41 லட்சத்து 55 ஆயிரத்து 50 வசூலித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் நீதிமன்ற முகாம்
சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான பார்க்கவி தலைமை தாங்கினார்.
குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜ் முன்னிலை வகித்தார். வக்கீல் சங்க செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்று பேசினார்.
1,759 வழக்குகளுக்கு தீர்வு
முகாமில் சிவில் வழக்கு, குடும்ப நல வழக்கு, காசோலை வழக்கு மற்றும் குற்ற வழக்குகள் உள்பட 1,759 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.41 லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முகாமில் வக்கீல்கள் சங்க தலைவர் வெங்கடேசன், வக்கீல்கள் ஆத்மநாபன், கார்த்திக்ராஜன், சிங்காரவேலு, பாலசுப்பிரமணியன், பாலாஜி, தியாகராஜன், கமலாம்பிகை, அரசு வக்கீல் முத்துக்குமார், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் முத்துக்குமார் நன்றி கூறினார்.
மயிலாடுதுறை கோர்ட்டில்
இதேபோல மயிலாடுதுறை கோர்ட்டில் நேற்று வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்ற முகாம் நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிசானாபர்வின், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை மேற்கொண்டதில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 21 வழக்குகளும், கூடுதல் சப்-கோர்ட்டில் 10 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றத்தில் 4 வழக்குகளும், முன்சிப் கோர்ட்டில் 2 வழக்குகளும், சாலை விபத்து நஷ்டஈடு, குடும்ப விவாகரத்து வழக்குகள், காசோலை வழக்குகள் என மொத்தம் 37 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடியே 69 லட்சத்து 77 ஆயிரத்து 651-க்கு தீர்வு காணப்பட்டது.
குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி அமிர்தம் தலைமையில் 164 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 63 ஆயிரத்து 300 அபராதமும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நீதிபதி அப்துல்கனி தலைமையில் 158 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 25 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
நிவாரண தொகைகள்
மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் வீதிவிடங்கன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாயூரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 வக்கீல்கள் சங்கத்தினரும் நேற்று கோர்ட் டு புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வழக்கு விசாரணைக்கான வழக்காடிகளுக்கு எந்தவித இடையூறும் அளிக்காததால் லோக் அதலாத் மூலம் நேற்று மயிலாடுதுறையில் 366 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ஒரு கோடியே 97 லட்சத்து 75 ஆயிரத்து 751 மதிப்பில் நிவாரண தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. கோர்ட்டு புறக்கணிப்பு செய்தாலும் வழக்கு விசாரணைக்கு இடையூறு செய்யாமல் இருந்த வக்கீல்கள் சங்க நிர்வாகிகளை சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் பாராட்டினார்.
Related Tags :
Next Story