மக்கள் நீதிமன்றத்தில் 1,900 வழக்குகளுக்கு தீர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதலாவது தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இதில் 1,900 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதலாவது தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இதில் 1,900 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்-கோர்ட்டு நீதிபதி கதிரவன் வரவேற்று பேசினார்.
இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், விரைவு விசாரணை கோர்ட்டு நீதிபதி பகவதி, மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்ரா, தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சிட்டிபாபு, வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி பேசியதாவது:-
1,900 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றமானது ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய கோர்ட்டுகளில் 9 அமர்வுகளாக நடைபெற்றது.
இதில் மொத்தம் 2 ஆயிரத்து 500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் சுமார் 1,900 வழக்குகளில் இருதரப்பினருக்கும் இடையே சமரச தீர்வு காணப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆக மொத்தம் இந்த லோக் அதாலத்தில் ரூ.8 கோடி மதிப்பில் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாகன விபத்து இழப்பீடு சிவில் வழக்குகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடன் நிலுவை தொகை, கணவன்-மனைவி குடும்ப வழக்குகள் உள்ளிட்ட 16 வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்தபட்டு அதன் மூலம் ரூ.70 லட்சத்து 75ஆயிரத்து 264-க்கு முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் தீர்வுகள் ஏற்படுத்தபட்டுள்ளது. இதில் சார்பு நீதிபதி நசீர் அலி தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் ராஜசேகர் மற்றும் வக்கீல் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story