மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x
தினத்தந்தி 12 March 2022 11:56 PM IST (Updated: 12 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சின்னதுரை எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். முகாமில் மருத்துவர்கள் கனகராஜ், ரம்யா, முத்தமிழ் செல்வி, உமா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற பரிந்துரை செய்தனர். முகாமில் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து 18 வயது வரை உடைய நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வி, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story