பாம்பன் ரெயில்வே பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை


பாம்பன் ரெயில்வே பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 12 March 2022 11:56 PM IST (Updated: 12 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில்வே பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென்று சோதனை நடத்தினார்கள்.

ராமேசுவரம், 

பாம்பன் ரெயில்வே பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென்று சோதனை நடத்தினார்கள்.

பாம்பன் ெரயில்வே பாலம்

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள ரெயில் பாலம் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அதுபோல் 105 ஆண்டுகளை கடந்தும் பாம்பன் ரெயில் பாலம் வழியாக இன்று வரையிலும் ரெயில் போக்குவரத்து மிக சிறப்பாகவே நடந்து வருகின்றது.
இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

மோப்ப நாய் உதவியுடன்...

மதுரையில் இருந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பாம்பன் ரெயில் பாலம் மற்றும் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். குறிப்பாக பாலத்தின் தண்டவாள பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர்.
ஆனால் இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் கேட்டபோது இது வழக்கமான சோதனை என்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வுக்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாம்பன் ரெயில்வே பாலத்தில் துப்பாக்கி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரெயில்வே பாதுகாப்பு படையினர் திடீரென சோதனை நடத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்தனர்.

Related Tags :
Next Story