விஷம் குடித்து பெண் தற்கொலை
தினத்தந்தி 12 March 2022 11:56 PM IST (Updated: 12 March 2022 11:56 PM IST)
Text Sizeவிஷம் குடித்து பெண் தற்கொலை
கொரடாச்சேரி;
கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் தசரதன் (வயது30). இவருடைய மனைவி நித்யா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நித்யா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த மருந்தை (விஷம்) குடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நித்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire