1 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
தொண்டி அருகே 1 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
தொண்டி அருகே 1 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்
தொண்டி அருகே புதுக்குடி தென்னங்கொல்லை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள காட்டுக் கருவேலமுட்புதரில் சிலர் ஒரு பெண்ணிடம் பணம் கொடுத்து ஏதோ பொட்டலங்களை வாங்கியது தெரியவந்தது.அதனை தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அந்தப்பெண் தொண்டி புதுக்குடி தென்னங்கொல்லை பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா மனைவி சைபு நிஷா (வயது 58) என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
1 கிலோ கஞ்சா பறிமுதல்
அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டதில் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் காட்டு கருவேல முட்புதரில் பதுக்கி வைத்து இருந்த 1 கிலோ கஞ்சாவையும், கஞ்சா விற்ற பணம் 53 ஆயிரத்து 310-யையும் கைப்பற்றினர். இது ெதாடர்பாக போலீசார் சைபுநிஷாவை கைது செய்தனர். இதுகுறித்து தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story