முக்கண்ணாமலைப்பட்டியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த சிறுவர்கள் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்


முக்கண்ணாமலைப்பட்டியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த சிறுவர்கள்  தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 13 March 2022 12:04 AM IST (Updated: 13 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த சிறுவர்கள் பிடித்தனர்.

அன்னவாசல்:
முக்கண்ணாமலைப்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது வீட்டு தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று கோழியை கவ்விக்கொண்டு மரத்தின் மீது ஏறியது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குபையில் அடைத்தனர். பின்னர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட 10 அடிநீளமுள்ள அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

Next Story