மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி
மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான 7-வது தேக்வாண்டோ போட்டி முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 12, 14, 17 ஆகிய வயதிற்குட்டபட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 4 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் 177 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் தேர்வான வீரா், வீராங்கனைகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். முன்னதாக போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தேக்வாண்டோ விளையாடும் மாணவர்கள் விளையாட்டில் சாதித்து பொறியியல், மருத்துவ படிப்புகளில் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்’’ என்றார். தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தேக்வாண்டோ சங்க தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story