மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா
மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வடகாடு:
வடகாடு அருகே அனவயல் கிராமத்தில் அறம் அறக்கட்டளை என்ற அமைப்பு கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் சாதனை படைக்கவும் அதற்கு அவர்களை தன்னம்பிக்கையூட்டி இந்த அமைப்பினர் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களாக சேர்ந்துள்ள 16 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நேற்று அனவயல் எல்.என்.புரம் ஊராட்சி தாணான்டியம்மன் கோவில் விழா அரங்கில் பாராட்டு விழா நடந்தது. இதில் அறம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆசிரியர் கணேசன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் துறை தலைவர் தினகரன் கலந்து கொண்டு 16 மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பரிசு கேடயங்களை வழங்கி, தலைமை செயலர் இறையன்பு எழுதிய ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதிப்பது எப்படி என்ற நூலையும் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story