பாசன குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்-காகித ஆலை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் மனு


பாசன குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்-காகித ஆலை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 13 March 2022 12:40 AM IST (Updated: 13 March 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

பாசன குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று காகித ஆலை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் மனு அளித்தனர்.

தோகைமலை, 
தோகைமலை பாதிரிபட்டி அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (டி.என்.பி.எல்.) கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள ஆற்றுவாரிகளில் திறந்து விடப்பட்டு பள்ளிப்பட்டி, வடசேரி, பில்லூர் உள்ளிட்ட பாசன குளங்களில் கலக்கிறது. இதனால் குளங்களில் வாழும் மீன்கள் அழிந்துவிடுகிறது. அந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்துவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. மேலும், இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பள்ளிப்பட்டி, வடசேரி, பில்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், கழிவுநீரை ஆற்றுவாய்க்கால் மற்றும் பாசன குளத்தில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து இருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Next Story