மக்கள் நீதிமன்றத்தில் 964 வழக்குகள் சமரச தீர்வு உரியவர்களுக்கு ரூ.5 ½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது


மக்கள் நீதிமன்றத்தில் 964 வழக்குகள் சமரச தீர்வு உரியவர்களுக்கு ரூ.5 ½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 12 March 2022 7:14 PM GMT (Updated: 12 March 2022 7:14 PM GMT)

மக்கள் நீதிமன்றத்தில் 964 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராஜா, முதன்மை சார்பு நீதிபதி சசிக்குமார், கூடுதல் சார்பு நீதிபதி அசோக்குமார், நீதித்துறை நடுவர் அறிவு ஆகிய நீதிபதிகள் கொண்ட 3 அமர்வுகளும், தாலுகா நீதிமன்றங்களில் 4 அமர்வுகளும் என மொத்தம் 7 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி உள்பட 964 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதில் ரூ.5 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 698 இழப்பீடு உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.

Next Story