திருச்சி மாவட்ட கலெக்டருக்கு விருது
திருச்சி மாவட்ட கலெக்டருக்கு விருது
திருச்சி, மார்ச்.13-
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 நாட்களாக மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடந்தது. அதன்படி இறுதிநாளான நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், முதல்-அமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கையினை மாநில அளவில் சிறப்பாக மேற்கொண்டதற்கான விருதினை, திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் முதல்வரின் முகவரி துறையின் மூலம் 70 ஆயிரத்து 833 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 39 ஆயிரத்து 29 மனுக்கள் (55.1 சதவீதம்) ஏற்று கொள்ளப்பட்டு, 23 ஆயிரத்து 590 மனுக்கள் (33.3 சதவீதம்) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 214 மனுக்கள் (11.60 சதவீதம்) நடவடிக்கையில் உள்ளன. ஏற்கப்பட்ட மனுக்களில் இதுவரை 5,990 பேருக்கு மாதாந்திர உதவித்தொகையும்,2,110பேருக்குவீட்டுமனைப்பட்டாக்களும், மாற்று திறனாளிகளுக்கு உதவும் உபகரணங்கள், 3 சக்கர வண்டிகள், உதவித்தொகை, வேலை நாடுனர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான இலவச பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story