திருநங்கையின் வளர்ப்பு மகன் தூக்குப்போட்டு தற்கொலை


திருநங்கையின் வளர்ப்பு மகன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 March 2022 1:06 AM IST (Updated: 13 March 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

திருநங்கையின் வளர்ப்பு மகன் தூக்குப்போட்டு தற்கொலை; கடிதம் சிக்கியது

திருவெறும்பூர்,மார்ச்.13-
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர்ஊராட்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராணி அம்மாள். திருநங்கையான இவர் மதன்குமார் (வயது 18) என்பவரை சிறுகுழந்தை முதலே தத்தெடுத்து வளர்த்து வந்தார். மதன்குமார் வேங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மதன்குமார் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததால் ராணி அம்மாள் அவரை திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மதன்குமார் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில் மதன்குமார் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மதன்குமார் பள்ளியில் சிறப்பாக நடனமாடுவார் என்றும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பள்ளியின் சார்பில்கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார் என்று சக மாணவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

Next Story