விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கடலூர் அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 50), விவசாயி. இவருக்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக வருமானம் இன்றி சிரமப்பட்டாார். இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமாரசாமி அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்திற்கு சென்றார். அங்கு அவர் விஷத்தை குடித்து விட்டார்.
இதில் மயங்கி கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துக்குமாரசாமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story