எள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


எள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 March 2022 1:28 AM IST (Updated: 13 March 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

எள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி, மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயரெங்காபுரம், கொடப்பாறை, சுப்பிரமணியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60 ஏக்கர் பரப்பளவில் எள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
கடந்த மாதம் வரை எள் கிலோ ரூ.90 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  அறுவடை செய்யப்பட்ட எள்ளை தரம் பிரித்து சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story