ஆட்டோ திருடியவர் கைது


ஆட்டோ திருடியவர் கைது
x
தினத்தந்தி 13 March 2022 1:37 AM IST (Updated: 13 March 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ திருடியவர் கைது செய்யப்பட்டார்

மதுரை, 
மதுரை கீழவைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 70). சம்பவத்தன்று இவர், தன்னுடைய ஆட்டோவை வக்கீல்புது தெரு பகுதியில் நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோ திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர், திலகர் திடல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை திருடிய மேலூரை சேர்ந்த தமிழரசன் (38) என்பவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story