அறிவியல் கண்காட்சி


அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 13 March 2022 1:50 AM IST (Updated: 13 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர், 
விருதுநகர் நோபிள் மெட்ரிக்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளியின் தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞான ரத்தினம், பள்ளியின் செயலர் மற்றும் முதல்வர் டாக்டர் வெர்ஜின்இனிகோ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கண்காட்சிக்கு ஜேசிஸ்அமைப்பு நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாணவ- மாணவிகள் தங்கள் அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். கண்காட்சிக்கு வந்தவர்களை மாணவர்களே உருவாக்கிய மனித வடிவிலான ரோபோ வரவேற்றது. மேலும் கண்காட்சியில் வர்ணத்தை கண்டறியும் ரோபோ தானியங்கி, போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு உள்பட பல்வேறு படைப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் நோபிள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள், தாமு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என அனைவரும் கண்காட்சியை பார்வையிட்டனர். முடிவில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story