4 மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்கு மோடியின் நல்லாட்சியே காரணம்-சி.டி.ரவி எம்.எல்.ஏ. கருத்து


4 மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்கு மோடியின் நல்லாட்சியே காரணம்-சி.டி.ரவி எம்.எல்.ஏ. கருத்து
x
தினத்தந்தி 13 March 2022 2:22 AM IST (Updated: 13 March 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

4 மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் நல்லாட்சியே காரணம் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார்

சிக்கமகளூரு:

4 மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் நல்லாட்சியே காரணம் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

மோடியின் நல்லாட்சியே...

சிக்கமகளூரு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் ெவளியாகி உள்ளது. இதில் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா அமோக ெவற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 

பிரதமர் மோடியின் 7 ஆண்டு கால நல்லாட்சியே 4 மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். 

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி

பா.ஜனதா வெற்றி பெற்றால் வாக்கு எந்திரத்தில் குளறுபடி செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் வாக்கு எந்திரத்தில் குளறுபடி எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். மக்கள் மத்தியில் பா.ஜனதாவுக்கு உள்ள செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் ஏதாவது பேசி வருகிறார்கள். 

யார் நல்லாட்சி செய்வார்கள் என்று மக்கள் விழித்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். கர்நாடகத்திலும் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிவுப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. 
கோவாவில் கடந்த முறை 13 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, தற்போது 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு கோவாவில் பூத் மட்டத்தில் வேலை செய்ததே இந்த வெற்றிக்கு காரணம். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story