சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் பூ மார்க்கெட் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கும், முல்லை ரூ.1,400-க்கும், காக்கடா ரூ.1,000-க்கும், செண்டுமல்லி ரூ.54-க்கும், பட்டுப்பூ ரூ.105-க்கும், ஜாதிமல்லி ரூ.1,150-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் சம்பங்கி ரூ.280-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story