மாணவிகள் விடுதியில் கல்வீசி தாக்குதல் மர்ம நபர்கள் அட்டூழியம்


மாணவிகள் விடுதியில் கல்வீசி தாக்குதல் மர்ம நபர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 13 March 2022 2:36 AM IST (Updated: 13 March 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

தலக்குளத்தில் மாணவிகள் விடுதியில் கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திங்கள்சந்தை, 
தலக்குளத்தில் மாணவிகள் விடுதியில் கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மாணவிகள் விடுதி
இரணியல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தலக்குளத்தில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் கல்லூரிக்கான மாணவிகள் விடுதி உள்ளது. 
நேற்று முன்தினம் இரவு விடுதி அறையில் மாணவிகள் வழக்கம் போல் படித்து கொண்டிருந்தனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் விடுதியின் பின்பக்கம் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
மாணவிகள் அலறல்
 இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபா்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். 
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் ஆறுமுகம்பிள்ளை இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் விடுதி மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story