இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியின்போது புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்த நடிகர் சுதீப்
இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியின்போது புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்த நடிகர் சுதீப்
பெங்களூரு: இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆகும். நேற்று இந்திய அணி டாசை வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. கொரோனா பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் போட்டி இதுதான். இந்த போட்டியை காண நடிகர் சுதீப் ஸ்டேடியத்திற்கு சென்றார். அப்போது ரசிகர்கள் கூட்டத்தில் ஒருவர் சமீபத்தில் மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் உருவப்படத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த நடிகர் சுதீப், தன்னிடம் அழைத்தார். பின்னர் அவருடன் சேர்ந்து நடிகர் சுதீப் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் நடிகர் புனித் ராஜ்குமாரின் உருவப்படத்தின் கீழ் நானும் உங்களை இந்த தருணத்தில் நினைவுகூருகிறேன் என்று உருக்கமாக எழுதி கையெழுத்திட்டார். இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றன.
Related Tags :
Next Story